93.KEEL THANJAI

06/06/2015
கீழ் தஞ்சாவூர் - மயிலாடுதுறை -திருப்புகலூர் எதிரிலுள்ள ரோட்டில் சென்று திருச்செங்காட்டு  வழியே 4 km  இவ்வூர்வுள்ளது . பல நூற்றாண்டாக மண்ணில் புதைந்திருந்த ஐந்து பொக்கிஷத்தை , விலைமதிக்கமுடியாத மாணிக்கத்தை இப்படியா போடுவது .அதுவும் அறுபத்து  மூன்று நாயன்மார்களில் செருந்துனை நாயனார் பிறந்த ஊர்  ஆகும் .இவ்வூரில் திருமூலநாதர் சிவாலயம் ஒன்று உள்ளது .அத்திருகோவில் செருந்துனை நாயனாரின் திருமூர்த்தம் வைக்கப்படுள்ளது .  

இவ்வூரில் நத்தம் மேடு என்ற இடத்தில்  ஐந்து சிவலிங்கத்திருமேனிகளும் அருள்பாலித்து வந்தனர் .அதில் அனைவரையும்  கவரும் வகையில் 32 பட்டை கொண்ட சிவலிங்கத்திருமேனியும் ஒன்று .மிக அழகுவாய்ந்த இவ்ஐந்து  சிவலிங்கத்திருமேனிக்கும்   இன்று ஒரே நாளில் பிரதிஷ்டையும் ,மேற்கூரை திருப்பணியும்  நடைபெற்றது.மறுநாள் 07/06/2015 அன்று திருகுட நன்னீராட்டு விழா  நடைபெற்றது.பெருந்திரளாக அக்கிராமமக்கள் கூடிவந்தனர் .குறிப்பாக இவ்வூர் கிராமத்தலைவர் மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள் .செங்கல் , சிமெண்ட் ஆகிய பொருட்களை திரு.இராதா கிருஷ்ணன் அவர்கள் கொடுத்து உதவினார்கள் , தரை போடும் செலவினை திரு.ஆறுமுகம் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார் . இத்திருப்பணி மேற்கூரை அமைத்த செலவினை நமது (கோச்செங்கண்ணாயனார்சிவத்தொண்டு சிவசபைஅமைப்பாளர்) சிவ.திரு.கபாலிநேசன் ஐயா சிவசபைக்கு வழங்கினார் .

தொடர்புக்கு-சிவ . செல்லையன்-9626392775

அ )அருள்மிகு தர்மேஸ்வரர் 





 ஆ )அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர்



இ )அருள்மிகு பீமேசுவர்






ஈ )அருள்மிகு நகுலேஸ்வரர் 








 உ)அருள்மிகு சகாதேவேசுவரர் 






 திருகுட நன்னீராட்டு விழா